‘Indian 2’:சிறப்புக் காட்சிக்கு அனுமதி..கமல் ரசிகர்கள் உற்சாகம் !

கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள, ‘இந்தியன் 2’ படத்திற்கு தமிழக அரசுச் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது, கமல் ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.

பல வருடங்களாகவே, விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் அன்று சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் ரசிகர்கள்மூலம் சில அசம்பாவிதங்கள் நேர்ந்து அது ரசிகர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிவதால், கடந்த 3 வருடங்களாகத் தமிழக அரசு, சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

குறிப்பாக 5 மணிக்கு, 6 மணிக்குத் துவங்கப்படும் சிறப்புக் காட்சிகளுக்குத் தடை விதித்த தமிழக அரசு 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது. இந்நிலையில் நாளை வெளியான உள்ள ‘இந்தியன் 2’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழக்க வேண்டும் என, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகளைத் திரையிட்டுக்கொள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *