அதிமுக, திமுக கட்சிகள் தலைவர்களை மறந்து விட்டனர் – செங்கோட்டையன்.!

Advertisements

அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தலைவர்களை மறந்து விட்டதாகத் த.வெ.க மாநில நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, திமுக, அதிமுக ஆகிய “இரண்டு கட்சிகளும் தலைவர்களை மறந்து விட்டதாகவும், அதனால் தான் அதிமுகவை விட்டுத் தான் வெளியே வந்ததாகவும் கூறினார்.

தவெகவுடன் கூட்டணி சேரத் தினகரன் விரும்பியதாகவும், ஆனால் அதற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றுவிட்டதாகவும் கூறினார்.

அவர் எங்குச் சென்றாலும் நன்றாக இருக்கட்டும் என்று செங்கோட்டையன் கூறினார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *