
திமுக கள்ள ஓட்டுகளையும், இறந்தவர்களையும் நம்பி இருக்கும் கட்சி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் பணியில் படிவங்கள் எவ்வாறு நிரப்ப வேண்டும்? என்பது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், சென்னைக்கு மத்திய அரசு சார்பில் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் திமுக கள்ள ஓட்டுகளையும், இறந்தவர்களையும் நம்பி இருக்கும் கட்சி என்று விமர்சித்துள்ளார்.
இதை தொடர்ந்து, வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் பணி வருவதால் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் கள்ள ஓட்டுகள் போட முடியாது என்று கூறினார்.
இது போன்ற தவறு செய்பவர்களுக்கு திருடனுக்கு தேள் கொட்டியதுபோல உணர்வு இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.




