மருத்துவர் ராமதாஸை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர்..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை, முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு வைகோவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இதயம் சார்ந்த பிரச்சனைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கார்டியோ ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சளி பாதிப்பால் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். வைகோ குடும்பத்தினரை சந்தித்து அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதனிடையே, ராமதாஸை, முதலமைச்சர் சந்தித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.முன்னதாக வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாகவும் அடுத்த சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *