“திமுக திட்டங்கள் தொடரும் என்பதே எங்களுக்குக் கிடைத்த வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் பதிலடி…!

திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் வாயிலாகக் கூற வைத்ததே, எதிர்க்கட்சியாகத் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சட்டசபையில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக சட்டசபையில் நேரடியாக பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் தினமும் சென்று வரவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.மக்களால் திமுக நிராகரிக்கப்பட்டதாகக் கூறி வரும் முதலமைச்சர், தங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதலமைச்சராக ஆகியிருப்பதை மறந்துவீட்டிற்களா எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியைப் பற்றி பதிவு செய்யும் முதலமைச்சர், குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, திமுக ஆட்சி அமைக்கவில்லை என்று குறிப்பிட்டார். திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் எனத் தங்கள் வாயிலாகக் கூற வைத்ததே, எதிர்க்கட்சியாகத் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *