விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா இணைய பக்கத்தில் 9 ஆயிரம் கருத்துகள் புதுச்சேரியில் இருந்து சென்றடைந்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் ஐந்தாவது மாநிலமாக இந்தியாவில் திகழ்கிறது என துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பெருமக்கள், துணை சட்டப்பேரவை தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, காவல்துறை தலைமை இயக்குனர் ஸ்ரீநிவாஸ், மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். புதுச்சேரி விமான நிலையத்தில் ஹெலிகாப்டரில் வந்திரங்கிய குடியரசு துணைத் தலைவருக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதன் பிறகு, குடியரசு துணைத் தலைவர் புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பேரரங்கில் நடைபெற்ற ‘வளர்ந்த பாரதம் @ 2047’ மாணவர்களுடனான உரையாடல் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், மாண்புமிகு உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினர் திரு செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் திரு பி.எம்.எல். கல்யாண சுந்தரம், பல்கலைகழக துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் தரணிக்கரசு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர்,மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் தன்கர் இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஆளுநராக அரசியலமைப்பில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து பதவிகளிலும் பணியாற்றி இருக்கிறார். அவரை இந்த நிகழ்ச்சியில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் எப்பொழுதும் எப்போதும் புதுச்சேரி மாநிலத்தை நினைத்து பெருமைப்படக்கூடியவர்.மாண்புமி
கு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி எப்பொழுதும் இளைஞர்களின் சக்தியை பெரிதாக நம்பக் கூடியவர். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா இணைய பக்கத்தில் 9 ஆயிரம் கருத்துகள் புதுச்சேரியில் இருந்து சென்றடைந்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் ஐந்தாவது மாநிலமாக இந்தியாவில் திகழ்கிறது.15வர்க்கும் மேற்பட்ட விக்சித் பாரத் நிகழ்சிகளில் பங்கேற்று இருக்கிறேன்.
மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்புற பகுதிகளை அதிகம் சென்றடைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.இலவச சிலிண்டர், இலவச வீடு கட்டும் திட்டம், விபத்து காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், இவைகள் மூலம் குறைந்தது குடும்பத்தில் ஒரு நபராவது இந்த திட்டத்தின்கீழ் பயனடைந்திருக்கிறார்கள்.
ஒரு மருத்துவராக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிறப்பம்சங்களை கூற நினைக்கிறேன்.
நான் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் சில நூறு ரூபாய் இல்லாத காரணத்தினால் உயிர்கள் இறப்பதை பார்த்திருக்கிறேன்.ஆனால் பாரத பிரதமரின் திட்டத்தின் மூலம் எளியவர்கள் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.
புதுச்சேரியில் 1,93,000 தகுதியுடைய பயனாளர்கள் இருக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட 1,83,000 பதிவு செய்திருக்கிறார்கள்.அதில் 69,000 பேர் பயனடைந்து இருக்கிறார்கள்.
அதிக எண்ணிக்கையில் புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு செய்யப் பட்டிருப்பதால் மத்திய அரசிடம் இருந்து விருதினை பெற்றிருக்கிறது.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரா நிகழ்ச்சிக்கு ஒருமுறை சென்றபோது ஒரு பெண்மணி மேடையில் தனது கணவரை அறிமுகப்படுத்தி அவர் சமீபத்தில் பயங்கர விபத்துக்குள்ளாகி இருந்த சூழலில் நம்பிக்கை இழந்திருந்த எங்கள் குடும்பத்திற்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் உதவியது. அதன்மூலம் தான் கணவர் உயிர் காப்பாற்றப்பட்டது என்று கூறினார். உயிரைக் காப்பாற்றுவது ஒரு நாட்டின் சிறந்த சேவை.
புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தில் இதன்மூலம் 69 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். புதுச்சேரியை சார்ந்த மக்கள் 1500 பேர் வெளி மாநிலங்கள் சென்று இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.
பாரதப் பிரதமரின் மக்கள் மருந்தகத்தின் மூலம் மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற முடிகிறது. இந்த விலை வெளியே பத்து ரூபாய்க்கு விற்கும் மருந்துகள். இங்கே ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது. குறிப்பாக, மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வயதானவர்கள் குறைந்த விலைக்கு மருந்துகள் வாங்கி இதன் மூலம் அதிகம் பயனடைகிறார்கள்.
சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு ஏவி சாதனை படைத்திருக்கிறோம். இதுபோன்று பல்வேறு துறைகளில் இந்தியா சாதனைகளை படைத்திருக்கிறதுபடைத்திருக்கி

