ByElection2026 : மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு – மாணிக்கம் தாகூர்.!

இடைத்தேர்தலுக்கான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

 சென்னை அருகே பனையூரில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், இக்கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் என்று தெரிவித்தார். இடைத்தேர்தலுக்கான இக்கூட்டணியின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
இந்தக் கூட்டணி சமூக நீதி, மதச்சார்பற்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி என்று தெரிவித்தார். மேலும் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *