
பீர்க்கன்காரணை பகுதியில் பொது மக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 35இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் 10இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை ஸ்ரீ பெரும்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை பகுதியில் நீண்ட நாட்களாக நகர்ப்புற அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் நியாய விலை கடை அமைத்துத் தருமாறு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று தாம்பரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 35இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் 10இலட்சம் புதிய நியாய விலை கடை மொத்தம் 45 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது .
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கழக பொருளாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி .ஆர் .பாலு, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி புதிய நகர்ப்புற அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் புதிய நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் காமராஜ், , பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சங்கர், மற்றும் 59வது வார்டு வட்ட கழக செயலாளர் வெங்கடேசன் ,மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

