அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும்: டிரம்ப் நம்பிக்கை!

அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரஷ்ய அதிபர் புதின் உடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றதாகவும், அவர் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அது மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். ஏனெனில் அவர்களால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறினார். ஆனால், தேர்தல் ஓட்டெடுப்பில் பாதிப்பை ஏற்படுத்த ஈரான் தீவிரமாக முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டினார். நாங்கள் ஈரானின் ஒன்பது கப்பல்களைச் செயலிழக்கச் செய்துள்ளதாகவும்,
அவற்றில் பல முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது, அந்தத் தாக்குதல்களுக்கு நாங்களே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *