
சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீடு உட்பட தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:ஆதாரம் இன்றி எந்தவொரு விசாரணை அமைப்பும் சோதனை நடத்தாது. மடியில் கனம் உள்ளவர்களுக்கு வழியில் பயம் இருக்கும். இதற்கு எதற்கு திமுக பதற்றம் பட வேண்டும்.
எத்தன பொய் வழக்குகளை திமுக அதிமுக மீது போட்டிருக்கு. அதில் நாங்கள் பல கட்சிகளை விட்டு பேச சொன்னோமா. சட்டப்படி எதிர்க்கொள்ள வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.
