
தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மனைவி கண் முன்னே கணவரைக் கொடூரமாகத் தாக்கிய கும்பலின் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம் நோக்கி வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது பெருங்களத்தூர் பாலம் கடந்து இரும்பூலியூர் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற காரைப் பின்னால் வந்த டெம்போ வேன் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் சாலையில் காரை நிறுத்திய விட்டு இறங்கி வேன் ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்பொழுது வேனில் வந்தவருக்கும் கார் ஓட்டுனருக்கும் கைகலப்பாக மாறியது.
இந்த நிலையில் சாலையில் நடந்த சண்டையைப் பார்த்த இரும்பூலியூர் மார்க்கெட் பகுதியில் இருந்த நபர்கள் ஒன்று சேர்ந்து கார் ஓட்டுநரைத் தாக்கி உள்ளனர்.
கணவரை அடிப்பதைப் பார்த்த மனைவி ஓடிப் போய்த் தடுக்க முயன்றபோது மனைவி கண் முன்னே அவரது கணவரைச் சாலையில் தள்ளிக் கொடூரமாகத் தாக்கினர்.இதைப் பார்த்த காரில் வந்த உறவினர்கள் மற்றும் கார் ஓட்டுநரின் மனைவி ஆகியோர் போராடி மீட்டு காரில் ஏற்றினர்.
தற்போது கார் ஓட்டுநரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இது போன்று காரில் வந்த கணவரை மனைவி முன் தாக்கிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது



