நிலவில் சந்திரயான்-3 ஏவுதல் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்தியா தனது கொடியை வீனஸ் கிரகத்தில் நாட்டத் தயாராகி வருகிறது.
வீனஸ் கிரகித்திற்கு விண்கலம் அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக முடிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். அதற்கான பேலோடுகள் ஏற்கனவே தயாராகிவிட்டதாகக் கடந்த புதன்கிழமை இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கினர்.
வீனஸ் பற்றிய இந்த ஆய்வு, கிரகத்தின் எதிர்காலம்குறித்த முக்கிய தகவல்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது. இந்தச் சோதனைக்கு இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

