நைனார் நாகேந்திரனுக்கு இதுதான் கடைசித் தேர்தல்…..!

தமிழக வெற்றிக் கழகம் 180 முதல் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும், விஜய்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தவெக செயற்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் குறைந்தது 180 தொகுதிகளையாவது கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

தவெக ஆட்சியைப் பிடிக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரனும் கூறியதை அவர் மறுத்தார்.

அதிமுகவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையும் என்று கூறப்படுவதையும் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

நைனார் நாகேந்திரனுக்கு இது கடைசித் தேர்தலாக இருக்கும் என்றும், தேர்தல் முடிவு வந்தபிறகு அவருக்குக் கட்சிப் பதவி இருக்குமா பறிபோகுமா என்று அவருக்கே தெரியாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *