
தாம்பரம் அருகே பிரெஷ் ஜூஸ் பார்க் கடையில் காலாவதியான கூல்ட்ரிங்ஸ்ஸை வாங்கி குடித்த மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.மாணவன் காலாவதியான கூல்டிரிங்ஸ் குடித்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு கண்ணன் தெருவில் ப்ரெஸ் ஜூஸ் பார்க் என்ற பெயரில் கூல் ட்ரிங்க்ஸ் பீசா போன்ற பொருட்களைக் கடையில் விற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 10 மேற்பட்டவர்கள் இரவு கபடி விளையாட்டை முடித்துவிட்டு சுமார் பத்து மணி அளவில் இந்தக் கடைக்குச் சென்று பீசா போன்ற பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர்.
அப்பொழுது ஐந்து மாணவர்கள் மட்டும் எனர்ஜிக்காக டின் கூல்டிரிங்ஸ் மற்றும் டின் குளுக்கோஸ் பாட்டில்களை வாங்கி குடித்துள்ளனர்.
குடித்து விட்டு மாணவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது ஓர் மாணவனுக்கு
சில நொடியில் வாந்தியும். மயக்கமும் வந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக இந்தப் பகுதி சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா என்பவர் பாதிக்கப்பட்ட மாணவனை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று நேரடியாகப் பார்த்தபோது அவர்கள் குடித்த அனைத்து பொருட்களும் காலாவதியானது தெரியவந்துள்ளது.அனைத்து டின் கூல் ட்ரிங்க்ஸ்களிலும் ஜூலை மாதம் 20203-ஆம் ஆண்டு என EXPIRED தேதி பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவன் டின் கூல்டிரிங்ஸ் காலாவதியானதாகவும் தனக்கு மயக்கம் வாந்தி வந்ததாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.எனவே தாம்பரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்ட கடைக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எடுத்துள்ளனர்.

