Tamannaah Bhatia: சைலண்டாகத் காதலனை கரம்பிடிக்க திட்டம்!

Advertisements

பிரபல நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர், தமன்னா. கேடி படம்மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்குத் தமன்னா அறிமுகமானார். தமன்னா, கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
தமன்னாவிற்கு எப்போது கல்யாணம் என்ற கேள்விதான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமன்னா சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியைக் கொடுத்திருந்தார். அதில், தனக்கு 30 வயதாகும்போது தனக்கு திருமணமாகியிருக்கும் என நினைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது இவருக்கு 33 வயதாகிறது.

தமன்னா, தனது திருமணம்குறித்த கேள்விகள் வரும் போதெல்லாம் அதற்கு மழுப்பலாகப் பதில் சொல்லி வருகிறார். ஆனால், சைலண்டாக இவர் தனது திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *