Bigg Boss Tamil Season 7: பூர்ணிமா வீசிய காதல் வலையில் வசமாகச் சிக்கிய விஷ்ணு!

Advertisements

Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நிக்சன் – ஐஷூவின் காதல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது புது காதல் ஜோடி ஒன்று உருவாகி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் சண்டைகளுக்குப் பஞ்சமில்லாததை போல் காதலுக்கும் பஞ்சமில்லாத சீசனாக மாறி இருக்கிறது. இந்தச் சீசனில் ஏற்கனவே மணி – ரவீனா, நிக்சன் – ஐஷூ என இரு காதல் ஜோடிகள் வலம் வந்துகொண்டிருந்தன. இதில் நிக்சன் – ஐஷூவின் காதல் கடுப்பேற்றும் வகையில் இருந்ததால் கடந்த வாரம் ஐஷூவை எலிமினேட் செய்து காதல் ஜோடிகளைப் பிரித்துவிட்டார் பிக்பாஸ்.

Advertisements

இதையடுத்து ஆட்டம் சூடுபிடிக்கும் எனப் பார்த்தால், தற்போது மற்றொரு காதல் ஜோடி உருவாகி இருக்கிறது. அது வேறுயாருமில்லை பூர்ணிமா – விஷ்ணு தான். முதலில் சரவண விக்ரம் மீது கிரஷ் இருப்பதாகக் கூறி வந்த பூர்ணிமா, தற்போது விஷ்ணுவிடம் தனக்கு லவ் ஃபீலிங் இருப்பதாகக் கூறி இருக்கிறார். இதுகுறித்த புரோமோ காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

அதில் எங்க வீட்ல நான் எந்தப் பொண்ண காட்டுனாலும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்றும் இப்போ வரை தான் சிங்கிளாக இருப்பதாகவும் விஷ்ணு கூறுகிறார். இதையடுத்து யார் தாங்க நீங்க எனப் பூர்ணிமா கேட்க, விஷ்ணு விஜய் என வெட்கத்தோடு சொல்கிறார் விஷ்ணு. இதைப் பார்த்ததும் இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கு, எனக்குப் புடிச்சிருக்கு எனக் கூறும் பூர்ணிமா, தனக்கு பீலிங் இருக்கிறது என ஓப்பனாகவே சொல்லிவிடும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் புல்லி கேங் வீசிய வலையில் விஷ்ணு சிக்கிக் கொண்டதாகவும், அவர்களின் அடுத்த பாயாசம் விஷ்ணுவுக்கு தான் என்றும் கிண்டலடித்து வருகின்றனர். மறுபுறம் இதை டைட்டில் வின்னர் சரவண விக்ரம் பார்த்தால் என்ன ஆகும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் மற்றுமொரு காதல் ஜோடி உருவாகி உள்ளது உறுதியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *