Edappadi K. Palaniswami: யாருக்கு யார் போட்டி என்பது தேர்தலின்போது தெரியும்!

யாருக்கு யார் போட்டி என்பது தேர்தலின்போது தெரியும்!

டிடிவி தினகரின் கட்சி இந்தத் தேர்தலுடன் முகவரி தெரியாமல் போய்விடும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Edappadi K. Palaniswami

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி.  யார் எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்வது அவரது கருத்து.
ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்ற கருத்துகளைக் கூறி வருகிறார் அண்ணாமலை. யாருக்கு யார் போட்டி என்பது மக்களவைத் தேர்தலின்போது தெரியும். எத்தனை முறை சொல்வது. பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது. தேசிய கட்சிகள் கூட மாநில பிரச்சனைகளை வைத்தே அரசியல் செய்கின்றன.

மத்தியில் யார் ஆட்சி அமைந்தாலும் மக்கள் பிரச்னைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க தான் தனித்து போட்டியிடுகின்றேன்.  தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகள்குறித்து அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.

பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை முன்வைக்காமலேயே தேர்தலைச் சந்திக்கின்றனர். டிடிவி தினகரின் கட்சியை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அதைக் கட்சியாகவே பார்ப்பதில்லை. டிடிவி தினகரின் கட்சி இந்தத் தேர்தலுடன் முகவரி தெரியாமல் போய்விடும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *