Taliban:உயிருள்ளதை டிவியில் காட்டக் கூடாது – புதிய சட்டத்தால் குழப்பத்தில் ஆப்கானிஸ்தான்!

Advertisements

உயிருள்ள எதையும் டிவியில் காட்டக் கூடாது தாலிபான்கள் சட்டம் இயற்றியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான்கள் புதிதுபுதிதாகப் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர்.

இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும்’ எனத் தெரிவித்த அவர்கள், பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர். ஏற்கனவே பெண்கள் பள்ளிக்கு, வேலைக்குச் செல்லக் கூடாது எனத் தடை விதித்தனர். மேலும் பெண்கள் ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றையும் டிவியில் காட்ட தடை விதித்துள்ளனர். தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் (living beings)புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.

இந்தச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் காட்டாமல் எப்படி செய்தி வெளியிடுவது என ஊடகங்கள் குழப்பத்தில் உள்ளன. எனவே சில ஊடகங்கள் மலை, நதியென இயற்கை காட்சிகளை ஒளிபரப்பத் தொடங்கி விட்டன.

தாலிபானின் இந்த அடக்குமுறை சட்டங்கள்குறித்து சர்வேதச நாடுகள், ஐ.நா. சபை கவலை தெரிவித்தாலும் தலிபான்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *