
ஜெர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படையினரின் எண்ணிக்கையில் ஐயாயிரம் பேரைத் திரும்ப அழைத்துக்கொள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது வடஅட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பு எனப்படும் நேட்டோவில் இடம்பெற்றுள்ள பல நாடுகளுக்குப் பிடிக்கவில்லை.
வலிந்து போய் வம்புச்சண்டை இழுக்கும் டொனால்டு டிரம்பின் போக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பிடிக்கவில்லை. இதனால் டிரம்புக்கும் ஜெர்மன் தலைவர் பிரடரிக் மெர்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களால் அமெரிக்கா “அவமானப்படுத்தப்பட்டுவிட்டது” என்று ஜெர்மன் தலைவர் பிரடரிக் மெர்சு கூறினார்.
இதையடுத்து அவரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஜெர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள படையினரில் ஐயாயிரம் பேரைத் திரும்ப அழைத்துக்கொள்ள அமெரிக்கப் பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள நேட்டோ படையினரில் அமெரிக்க வீரர்கள் 36 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் இத்தாலியில் 12 ஆயிரம் பேரும், பிரிட்டனில் பத்தாயிரம் பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.


