Sep 2023 Monthly Rasi Palan: கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

Advertisements


அன்புள்ள கடக ராசி நேயர்களே:

 

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய அனுகூலத்தை அடைவீர்கள்.

சனி வக்ர கதியில் இருப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை குறையலாம்.

பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் சிறிய தடைக்குப் பின் நிறைவேறும்.

கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை பெற முடியும்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை அளிக்கும்.

உயர் அதிகாரிகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சிவ வழிபாடு செய்வதாலும் மன சங்கடங்கள் குறையும்.

சந்திராஷ்டமம் – 26-09-2023 இரவு 08.28 மணி முதல் 28-09-2023 இரவு 08.28 மணிவரை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *