ராமதாஸ் புதுக் கட்சி.. அதிமுக கூட்டணியில் விசித்திரம்..!

Advertisements
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பல புதுமையான நிகழ்வுகள் நடைபெற காத்திருக்கின்றன.ஆட்சியைப் பிடிப்பதற்காக இப்படி எல்லாம் அரசியல் கூட்டணிகளை அமைப்பார்களா என்கிற அளவிற்கு அதிர்ச்சி தரும் பல திருப்பங்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அறிவுத்திறன் கொண்டவர் மருத்துவர் ராமதாஸ் என பெயர் பெற்றவர். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் வருமுன் அறிந்து அதற்கு தீர்வையும் சொல்ல கூடிய மிகப்பெரிய ஜாம்பவானாக திகழக்கூடியவர் மருத்துவர் ராமதாஸ் .
வன்னியர் சங்கத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பை உருவாக்கி அதனை வளர்த்து ஆளாக்கியவர் மருத்துவர் ராமதாஸ் . இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் மூத்த அரசியல் தலைவராக இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் இவர்தான் . ஆனால் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவர் ராமதாஸுக்கும்,  அவரது மகன் அன்பு மாணிக்கும் இடையே மிகப்பெரிய போர் சூழல் ஏற்பட்டு நாள்தோறும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .
மருத்துவர் ராமதாஸ் ஏற்கனவே ஒரு பெண்மணியுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனக்கு கிடைக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அந்த பெண்மணி பெயரில் எழுதி வைக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குடும்பச் சண்டையானது அரசியல் சண்டையாக மாறிவிட்டது என்பது திரை மறைவு செய்தியாகும் . இந்த நிலையில் நீயா நானா என மருத்துவர் ராமதாசும் மருத்துவர் அன்புமணியும் மிகப்பெரிய போர்க்களத்தை நடத்தி வருகிறார்கள்.
இருவரும் சமரசம் ஆகி விடுவார்கள் இது குடும்பச் சண்டை தான் என்று அனைவரும் கருதி வந்த நிலையில் நாளுக்கு நாள் இந்த சண்டை உச்சகட்டத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது . இந்த நிலையில் தற்பொழுது தந்தை மகனுக்கு இடையேயான போர்க்களத்தில் மகன் அன்புமணி தான் வெற்றி படிக்கட்டுகளை நோக்கி ஏறி வருகிறார் . கட்சியின் இளைய தலைமுறையினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் இது மட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி தான் என தேர்தல் கமிஷன் அறிவித்துவிட்டது .
இது மட்டுமல்லாமல் பீகார் தேர்தலை மையமாக வைத்து மாம்பழ சின்னத்தை அன்புமணி தரப்பினர் சூசமாக பெற்றுவிட்டனர்.  தற்பொழுது தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தாலும் புதுச்சேரியில் தேர்தல் நடந்தாலும் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்குதாதான் மாம்பழ சின்னம் உரியது என தேர்தல் கமிஷன் அறிவித்ததாக தெரிகிறது . இதற்கிடையே மருத்துவர் அன்புமணியை எதிர்த்து மருத்துவர் ராமதாஸ் போராடிவரும் அனைத்து சூழ்நிலைகளும் அவருக்கு எதிர்மறையாகவே நடைபெற்று வருகிறது .
மாம்பழ சின்னத்தை எங்களுக்கு தான் தர வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு 250 பக்க கடிதம் எழுதி கொடுத்த நிலையில் தற்பொழுது அந்த சின்னம் தங்கள் கைக்கு வராது என ராமதாஸ் ஒருவித பயத்திலிருந்து வருவதாக தெரிகிறது . இதற்கிடையே வயது மூப்பு காரணமாக ராமதாஸ் தரப்பில் அவரால் அதிவேகமாக செயல்பட முடியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சில மூத்த நிர்வாகிகளும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மருத்துவர் ராமதாஸ் பின்னணியில் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக முயற்சி செய்து வந்தார் காரணம் மருத்துவர் அன்புமணி ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.
எனவே திமுக பக்கம் தான் கூட்டணி வைக்க வேண்டும் என முடிவெடுத்த ராமதாஸ் இது தொடர்பாக முயற்சிகள் எடுத்த போது திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வலுவாக இருக்கிறது . எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டு விட்டு ராமதாசுடன் கூட்டணி வைக்க திமுக மேலிடம் விரும்பவில்லை . இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்பது முறித்து முடிவு எடுக்காத பரிதாப நிலையில் மருத்துவர் ராமதாஸ் தள்ளப்பட்டு இருக்கிறார் .
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியை தவிர முக்கிய கட்சிகள் எதுவும் இணைப்பில் இல்லை.  அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுகவுடன் கூட்டணி சேர்க்க வேண்டும் என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விருப்பமாக இருக்கிறது இது தொடர்பாக அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல வியூகங்கள் அமைத்து கொடுத்து வருகிறார் .
முதல் கட்டமாக தந்தை மகன் ஆகிய இருவருக்கும் இடையே ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அது பலிக்காமல் போய்விட்டது . தற்பொழுது இந்த சூழ்நிலையை வெற்றிகரமாக மாற்றுவதற்காக புதிய திட்டங்களை வகுத்திருக்கிறார்கள் . மருத்துவர் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேரும் பட்சத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமகவை அதிமுகவுடன் இணைப்பது என ஆலோசிக்கப்பட்டது .
ஆனால் இதில் பல முரண்பாடுகள் நிலவுவதால் தற்பொழுது மருத்துவர் ராமதாஸ் புதிய செயல் திட்டங்களுக்கு வடிவம் கொடுத்து வருகிறார் .
அந்த வகையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற  ஆலோசனைகள் இருக்கிறது .இதன் நிமித்தமாக அய்யா பாமக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அதனை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து அதிமுகவுடன் கூட்டணி சேர வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது .
தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகவும் புதுமையான ஒரு அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது . தந்தை ராமதாஸ் தலைமையிலான அய்யா பா ம க அதிமுக ஆதரவில் செயல்படும் பட்சத்தில் , மகன் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் நிலையில் ஒரு விசித்திரமான கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது . தேர்தல் சமயத்தில் இது தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது .
எது எப்படி இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் மருத்துவர் ராமதாஸும் மருத்துவர் அன்புமணியும் இணைய போகிறார்கள் என்பது மட்டும் உண்மையான நிலவரமாக பார்க்கப்படுகிறது . இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய ரகசிய செய்தி ஒன்று இருக்கிறது . அதாவது அதிமுக பாஜக இடையே மிகப்பெரிய பண பேரம் பேசப்பட்டு தான் இந்த கூட்டணி உருவாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *