
கால்பந்து உலக கோப்பை தொடரின், இந்திய ஒளிபரப்பு உரிமத்தை எந்த நிறுவனமும் வாங்கவில்லை என்பதால் இந்திய கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் வருகிற ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள கால்பந்து உலக கோப்பை தொடரின், இந்திய ஒளிபரப்பு உரிமத்தை எந்த நிறுவனமும் வாங்கவில்லை.
இந்திய நேரப்படி நள்ளிரவிலும், அதிகாலையிலும் போட்டிகள் நடைபெறும் என்பதால் பார்வையாளர்கள் பெரிதளவில் இருக்கமாட்டார்கள் என நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
இதனால், இந்திய கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



