சங்ககிரி அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதி விபத்து: இருவர் பலி

Advertisements
சங்ககிரி அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதி விபத்து:  சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா துட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ்( 44). இவரது நண்பரான மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரைச் சேர்ந்த நரசிம்மன் (43), ஆகிய இருவரும் டிராக்டர் வண்டியில் அதிகாலை 3 மணிக்கு சேலம் பக்கம் இருந்து கோயமுத்தூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கலியனுர் பிரிவு என்ற இடத்தில் பின்னால் வந்த  தர்பூசணி பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் மோதி விபத்தானது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ், நரசிம்மன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக்( 23), என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கில் வைத்தனர். அதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பு இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *