Veeralakshmi:விஜய், த்ரிஷா, தனுஷிடம் டெஸ்ட் எடுங்க.. வீரலட்சுமி பரபர புகார்!

Advertisements

சென்னை: சினிமா நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகச் சுசித்ரா கூறிய நிலையில் அவர்களைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடகி சுசித்ரா தற்போது யூடியூப் சேனல்களுக்குக் கொடுத்து வரும் பேட்டிகள், சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திரையுலகில் அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் சில நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருந்தார்.

சுசித்ராவின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். சுசித்ரா தனது பேட்டியில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர்களைப் பரிசோதனை செய்து, போதைப்பொருள் கும்பல்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

வீரலட்சுமி கொடுத்துள்ள புகார் மனுவில், கடந்த சில வருடங்களாகத் தமிழ்நாட்டில் இளைய சமூகம் சீரழிகின்ற வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தடை செய்யப்பட்ட மிகக் கொடிய போதை பொருள் வஸ்துக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதனால் மாணவர்களின் உடல்நலன், கல்வி, நாசமாகிப் போகிறது. இதனால் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தப் போதைப்பொருள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்தில் இருக்கக்கூடிய சினிமாத்துறையினர் துளியும் இந்த மக்கள்மீதும் இளைய சமூகத்தின் மீதும் இளைய சிறார்கள்மீதும் மாணவர்கள்மீதும் அக்கறை இல்லாமல் தங்கள் பொறுப்பை உணராமல், தங்களது சுப போக வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி இந்தச் சமூகமும், இந்த மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நமக்கு என்ன என்று அலட்சியத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.

பிரபல நடிகர் நடிகைகளான நடிகர்களான விஜய், தனுஷ், விஜய் யேசுதாஸ், திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் ஆகியோர் விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட கொடிய போதைப் பொருட்களான கொக்கைன் பயன்படுத்துவதாகப் பாடகி சுசித்ரா பல்வேறு யூடியூப் சேனல் பேட்டிகளில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சுசித்ரா, ஊடகத்தின் முன்பாகவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களிடையே இந்தக் கொக்கைன் என்ற போதை பொருள் பயன்படுத்தினால் அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காது என்று இளைய சமூகத்தினர் இடையே மற்றும் மாணவர்களிடையே எண்ணம் உருவாகியுள்ளது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மக்கள் எங்காவது கஞ்சா பயன்படுத்தியதாகத் தகவல் கிடைத்தால் உடனடியாகப் போலீசார் அங்குச் சென்று அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், பிரபல நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வெளிப்படையாகப் பிரபல பாடகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்று உடல் பரிசோதனை செய்து இந்தக் கொக்கைன் எங்கிருந்து இவர்களுக்குக் கிடைத்தது என்பது பற்றி விசாரித்து, போதைப்பொருள் மாஃபியா கும்பல்மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இளைய சமூகத்தினரை பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *