ஈரான் வான்வெளி இப்போது எங்கள் கட்டுப்பாட்டில்..!

Advertisements

ஈரானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை விரிவு படுத்த உள்ளது என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சியில் பேசியபோது, ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் என்றும் தங்கள் வெற்றி முழு உலகிற்கும் அணுசக்தி அச்சுறுத்தல்களை நீக்கும் என்றும் கூறினார். ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இஸ்ரேல் தற்போது ஈரான் வான்வெளியை  கிட்டத்தட்ட முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை விரிவு படுத்த உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *