சூர்யாவின் ‘ரெட்ரோ’ முதல் நாள் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் படக்குழு அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . ஆனால் சமீப 2 ஆண்டு காலமாக இவரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை .தற்போது சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் – சூர்யா இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

முன்னதாக வெளியான படத்தின் பாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று படம் வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படம் சூர்யாவுக்கு கம்பேக்காக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.46 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17.75 கோடியை வசூலித்துள்ளது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களாக இருப்பதால் ரூ.100 கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *