
கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபையின் போப்பாக இருந்த புனித பிரான்சிஸ் போப் காலமானார் . எனவே கத்தோலிக்க மக்களுக்கு புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்காக கார்டினல்களின் ரகசிய கூட்டம் வரும் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் தேதி காலமானார். உலக நாடுகளின் தலைவர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு போப் பிரான்ஸிஸ் உடல் கடந்த 26 ஆம் தேதி வாடிகனில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுமார் 12 ஆண்டுகள் போப் ஆண்டவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கான பணிகளை வாடிகன் தொடங்கியுள்ளது. போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல்களின் ரகசிய கூட்டம் வரும் 7 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கார்டினல்கள் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்றிரவு கூடி சிறப்பு திருப்பலி நடத்தினர். தொடர்ந்து மே 7 ஆம் தேதி வரை தினமும் சிறப்பு திருப்பலி நடத்த உள்ளனர்.



