கனமழை மற்றும் ஃபெங்கல் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை 9 மாவட்டங்களில் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன் படி தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து “ஃபெங்கல்” புயலாக நேற்று நவம்பர் 29ம் தேதி வலுப்பெற்றது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று நவம்பர் 30ம் தேதி பிற்பகல் புயலாகக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.