தமிழில் நிறைய படங்களில் நடித்து நகைசுவை மூலமாக பிரபலமானவர் தான் யோகி பாபு . செந்தில் – கவுண்டமணி , வடிவேல் – விவேக் ,சந்தானம் அதனை தொடர்ந்து தற்போது அந்த பட்டியலில் யோகி பாபு வந்து விட்டார். சினிமாவில் பல்வேறு இன்னல்களை தாண்டி ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
ஜானா படத்தின் புரமோஷனுக்கு வராத யோகி பாபு, நடிகராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் என அதன் தயாரிப்பாளர் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.இயக்குநர் பிரபதிஷ் சாம்ஸ் இயக்கத்தில் பேண்டசி அட்வன்ச்சராக உருவாகியுள்ள படமே ‘கஜானா’. இதில் யோகிபாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டே படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 18 ஆம் தேதி கஜானா திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி என்பவர் இசையமைத்துள்ளார்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட கஜானாவை தேடி செல்லும் இளைஞர்களின் சாகச பயணமே ‘கஜானா’ திரைப்படமாகும். கஜானாவை பாதுகாத்து வரும் பேய்கள் புதையலை காப்பாற்ற செய்யும் அட்டகாசங்களை காமெடி கலந்த திகிலுடன் சொல்லும் திரைப்படமாக இது அமைந்துள்ளதாக தெரிகிறது.
திரைப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நடிகர் யோகி பாபு சென்னையில் நடைபெற்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. படத்தின் புரோமஷன் நிகழ்ச்சிக்கு வராத யோகி பாபுவை, படத்தின் தயாரிப்பாளர் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

