Srirangam: வத்த குழம்பு!

Advertisements

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு!

பொதுவாக வத்தக்குழம்பு என்றாலே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். வத்தக்குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று. மற்ற குழம்புகளை விட வத்த குழம்பில் சுவை அதிகம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சுவையில் வத்த குழம்பு செய்வார்கள். அதில் நாம் இன்று  சுவையான ஸ்ரீரங்க வத்த குழம்பு செய்வது என்று பார்ப்போம்.
ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்- தேவையான அளவு
கடுகு- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 4 டீஸ்பூன்
கடலை பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 20
பூண்டு- 20 பல்லு
கறிவேப்பிலை- 2 கொத்து
உப்பு- தேவையான அளவு
பச்சை அரிசி- 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம்- 1 டேபிள் ஸ்பூன்
புளி கரைசல்- நெல்லிக்காய் அளவு புளி கரைசல்
காய்ந்த மிளகாய்- 4
மஞ்சள் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1 டேபிள் ஸ்பூன்
மிளகு- 1 டேபிள் ஸ்பூன்
மல்லி- 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம்- 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
சுண்டைக்காய் வத்தல்- 1 கப்

ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு செய்யும் முறை:

Advertisements

முதலில் ஒரு கடாயில் வெந்தயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.(அடுப்பை குறைவாக வைத்து வறுக்க வேண்டும்.) பின்பு இதை மிக்சியில் ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதே கடாயில் மிளகு, மல்லி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், அரிசி, துவரம் பருப்பு போன்றவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

இதை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது மசாலா தயார்.

அடுத்து ஒரு கடாயில், தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளியுங்கள். இவை நன்றாக பொரிந்ததும், அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.


அடுப்பில் உள்ள பொருட்கள் வதங்கியதும், அதனுடன் சுண்டைக்காய் வத்தல் சேர்த்து வதக்குங்கள். பிறகு அதனுடன் வெந்தயப்பொடி சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.அதன் பின் புளி கரைசல் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்த மசாலா பொடி மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும்  வெல்லம் சேர்த்து கொதிக்க விடுங்கள்.இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும், அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்கவிட்டு அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சூப்பரான ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு தயார்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *