அண்ணாமலை ஆதரவாளரை நீக்கிய நைனார்.!

Advertisements
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளர் ஒருவரை தற்போதைய பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் நீக்கியது தொடர்பாக அண்ணாமலை மீண்டும் மோதலில் இறங்கி இருக்கிறார் . சமீப காலமாக தமிழக அரசியல் களத்தில் தீவிர மோதல் போக்குகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதிமுக கட்சியில் இருந்து மல்லை சத்தியா விலகினார். அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரட்டி அடிக்கப்பட்டார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் நீக்கப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகினார். உச்சகட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ராமதாஸ் அன்புமணி இருவரும் பிரிந்தனர் . இந்த சூழ்நிலையில் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியிலும் முக்கிய நிர்வாகி ஒருவர் நைனார் நாகேந்திரனால் நீக்கப்பட்டு புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது .
திருநெல்வேலியை சேர்ந்த நைனார் நாகேந்திரன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து அண்ணாமலைக்கும் அவருக்கும் ஒத்துப் போகவில்லை இருவரும் திரை மறைவில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு வருகிறார்கள் . இதன் ஒரு கட்டமாக நயினார் நாகேந்திரன் நடத்தும் கூட்டங்களுக்கு பெரும்பாலும் அண்ணாமலை செல்வதில்லை. இது மட்டுமல்லாமல் அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர் அவ்வப்போது அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.  இது தொடர்பாக நைனார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளை பலமுறை எச்சரித்து வருகிறார் .
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான ஜானி ராஜா என்பவர் சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்தை வெளியிட்டார் திருவேற்காட்டைச் சேர்ந்த இவர் சமூகவலைத்தலங்களில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரால் பாரதிய ஜனதா கட்சி பலவீனம் அடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார் . இது மட்டுமல்லாமல் கட்சி மிகவும் பலவீனம் ஆகிவிட்டது கடந்த மூன்று வருடமாக கடுமையான உழைப்பு போட்டு அதிரடி அரசியல் செய்து கட்சியை வளர்த்த தலைவர் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எதிர்பாராமல் மாற்றிவிட்டார்கள்.
இதனால் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் கோபத்திலும் இருக்கிறார்கள் என்றெல்லாம் பதிவிட்டிருந்தார் . இது மட்டுமில்லாமல் நயினார் நாகேந்திரன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளையும் அவர் தெரிவித்திருந்தார் . எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மிக கடுமையாக உழைத்து வருகிறார்கள் . அவர்களை பொறுமையாக கையாளாமல் தனக்கென ஒரு குழுவை வைத்துக்கொண்டு பாஜக தொண்டர்கள் மீது வழக்கு போடப்படும் என சிறுபிள்ளைத்தனமாக அச்சுறுத்தி வருகிறார் .நைனார் நாகேந்திரன் என்றும் விமர்சனம் செய்திருந்தார் .
இந்த நிலையில் அண்ணாமலைதான் ஜானி ராஜாவை தூண்டிவிட்டு சமூக வலைத்தளங்களில் இத்தகைய கருத்தை பரப்ப செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியே பரவியது . இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியான ஜானி ராஜாவை கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார் .
இதன் எதிரொலியாக அண்ணாமலை நைனார் நாகேந்திரன் மீது கோபமடைந்திருக்கிறார் . இதற்கிடையே கும்பகோணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை நைனார் நாகேந்திரன் கூட்டி இருந்தார்.. இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை செல்லாமல் புறக்கணித்து விட்டார் . சென்னையில் தனது வீட்டிலிருந்த அண்ணாமலை கும்பகோணம் வருவதற்கு மழை காரணமாக விமானம் கிடைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அவர் கூட்டத்திற்கு செல்லவில்லை . இதனால் நைனார் நாகேந்திரன் அண்ணாமலை இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கிறது .
அண்ணாமலையின் ஆதரவாளரை நயினார் நாகேந்திரன் நீக்கியது தொடர்பாக தற்பொழுது கட்சிக்குள் புதிய பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது.
கட்சி தலைமை மீது அக்கறையோடு புகார் தெரிவிக்கும் தொண்டர்களை பதவி நீக்கம் செய்வது என்பது எந்த வகையில் நியாயம் நைனார் நாகேந்திரன் தன்னை திருத்தி கொள்ள வேண்டும் நீண்ட காலமாக உழைத்த கட்சி தொண்டர்களை நினைத்த நேரத்தில் பதவி நீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
அண்ணாமலை நயினர் நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் , ஜானிராஜாவை நீக்கியது தொடர்பாகவும் டெல்லி பாஜக மேல் இடத்திற்கு தகவல் பறந்து இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி மேல் இடத்தில் நைனார் நாகேந்திரன் விளக்கம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *