
தேனியில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் சுருளி மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, கொட்ட தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அருவியில் தண்ணீர் கொட்டியதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தந்து இயற்கை அழகை ரசித்து சென்றனர்.



