CM Stalin: தமிழகம் முதன்மை மாநிலமாக உயர  நடவடிக்கை!

தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உயர  நடவடிக்கை! மு.க.ஸ்டாலின்.

தொழில்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு உயர் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை: சென்னை பல்லாவரத்தில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

சர்வதேச கேபிடல் ரேடியல் ஐடி பூங்கா முதல் கட்டத்தை சென்னையில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.உலகத்தரம் வாய்ந்த பூங்கா தமிழ்நாட்டில் அமைத்ததற்காக நிறுவனத்திற்காக வாழ்த்துக்களை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் புதிய ஒரு தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக ஏராளமான நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது
முதல் கட்டமாக இன்று 1.3 மில்லியன் சதுர அடி காண தயார் நிலையில் துவக்கப்பட உள்ளது.

இரண்டாம் கட்ட கேபிடல் ரேடியல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்யும்.தொழில்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு உயர் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் இயக்குவதற்காக திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது .தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம் புத்தகதொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2030-ம் ஆண்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈட்டுவோம் என்ற இலக்கை அடையும் நாள் வெகுதூரம் இல்லை.உயர் கல்வி கற்கின்ற மாணவர்கள் மற்ற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த வளர்ச்சிகளை மேம்படுத்த அவர்கள் துறையில் முதன்மையாக சிறக்க செய்வதன் வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் குறிக்கோள்.

உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர உள்ளனர். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *