ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு ரஜினி, கமல் காரணமில்லை….. சுந்தர்.சி திட்டவட்டம்……!

ரஜினியின் படத்தில் வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு உண்மையாக இருக்க முடியாததால் தான் விலகியதாக நடிகர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, நடிகர் ரஜினியின் 173 ஆவது படத்தில் விலகியது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, அந்த படத்தை எடுக்க தனக்கு அதீத அழுத்தம் இருந்தது என்றும் வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு உண்மையாக இருக்க முடியாததால் தான் விலகியதாகக் கூறினார்.

தன் முடிவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் காரணமில்லை என்றார். ரஜினியிடம் கூறிவிட்டு தான் படத்திலிருந்து தான் விலகியதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *