இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 387 ரன்களை குவித்தது.
இதில், அதிகபட்சமாக பென் டக்கெட் 141 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 91 ரன்களும், ஜோ ரூட் 74 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், ரோகித் சர்மா 138 ரன்களும், சுப்மன் கில் 77 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *