கருத்துக் கணிப்புகள் அல்ல, அவை கருத்துத் திணிப்புகள்……!

Advertisements

கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் கருத்துத் திணிப்புகளாகவே உள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கருத்து கணிப்பு என்பது முறையாக இருந்தால் அதன்மீது நம்பிக்கை இருக்கும். ஆனால், அதிகமான இடங்களில் கருத்து திணிப்புதான் உள்ளது என்றார்.

கருத்து கணிப்பு குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. மக்களின் உண்மையான கருத்து கணிப்பும், உண்மையான எண்ணங்களும், கடந்த 5 ஆண்டுகள் திமுக எவ்வாறு ஆட்சி நடத்தியது என்பதையும் 4 ஆம் தேதி தெரிந்துகொள்ளலாம் என்று கூறினார்.

விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *