விசிக-வால்தான் திமுக கூட்டணி வலிமையானது…..!

திமுக கூட்டணி வலிமையாக இருக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே காரணம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சட்டமன்றத் தேர்தலில் ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்ட மூவருக்குப் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் சீட் வழங்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணி வலிமையாக இருப்பதற்கு விசிக-வே முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், சில தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக விசிகவினர் சரியாகப் பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற வாய்ப்பில்லை என்றும், விஜய் தலைமையிலான கட்சி திமுக மற்றும் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *