
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ளக் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள், தலைவர் துரைசாமியின் தலைமையில் சிக்கராய புரத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்பு உரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கீழ்வருமாறு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் பாராட்டும் வகையில், திராவிட மாடல் நல்லாட்சி நடைமுறைபடுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்ற வரலாற்றுச் சாதனையை உருவாக்கிய நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் மார்ச் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
