5 மற்றும் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியதன் எதிரொலியால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதன்படி, பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

திடீர் காற்று மற்றும் மழை உருவாவதை எச்சரிப்பது 3ம் எண் கூண்டு ஆகும்.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.ப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் இடது பக்கமாகப் புயல் கரையை கடக்கும் என்பதை எச்சரிப்பது 5ம் எண் கூண்டு ஆகும்.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் வலது பக்கமாகப் புயல் கரையை கடக்கும் என்பைத தெரிவிப்பது 6ம் எண் கூண்டு ஆகும்.

கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என எச்சரிப்பது 7ம் எண் புயல் கூண்டு ஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *