பொய் பேசும் மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்!

Advertisements

பொய் பேசும் மோடிக்கு ஆதரவாகத் தேர்தலில் பிரச்சாரம் செய்ததற்குப் பிராயச்சித்தம் தேட உள்ளதாகப் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். அக்பருக்கு பீர்பால் போல் தான் மோடிக்கு இருக்க வேண்டும் அவர் விரும்பினார் என்றும் அதனைத் தான் ஏற்கவில்லை என்பதற்காக மோடி தன்மீது கோபமடைந்தார் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

2014 மக்களவை தேர்தலில் மோடிக்காகப் பிரச்சாரம் செய்ததற்காகத் தான் தற்போது பரிகாரம் செய்ய உள்ளேன். மோடி எப்படிப்பட்ட பொய்யராக மாறியிருக்கிறார். பதவிக்கு வந்த 15 நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் திரும்பக் கொண்டு வருவேன் என்று கூறியதே அதற்கு உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோடி மற்றும் அமித் ஷாவை பல சந்தர்ப்பங்களில் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு வந்த அழைப்புகளில் மூன்றாவதாக அட்டண்ட் செய்தது மோடியின் அழைப்பைத்தான் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மோடியின் செல்வாக்கு குறித்து சிலாகித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த சுப்ரமணிய சுவாமி, மோடியின் அழைப்பை டிரம்ப் மூன்றாவதாக ஏற்றார் என்றால் முதல் 2 அழைப்பு யாருடையது, 1.43 பில்லியன் மக்கள் வாழும் நாட்டில் ஜெய்சங்கர் கூறிய இந்த விஷயத்தைத் தலைப்புச் செய்தியாகப் போடுகிறார்கள். விரைவில் டிரம்பின் ஷூவை துடைக்க மோடிக்கு அனுமதி கிடைத்துள்ளது என்றும் வெயிட்டர் [ஜெய்சங்கர்] கூறக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *