
அந்த அறிக்கையில் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் இந்த சிறப்பு செய்தி தொகுப்பினை காணலாம். மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இங்கு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், இழுத்தடிப்பதோடு மட்டுமில்லாமல் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான திகழ்ந்த மு.க.ஸ்டாலின் சமூகநீதி பற்றி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு சமமானது எனவும்,
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படனும் அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் சொல்லப்போனால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்னாடியே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சியையே சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளபடி 5 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மகாராஷ்டிரத்தில் இதுவரை நடைமுறைக்கு வரவே இல்லை. ஆனால் அங்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது. இல்லாத இட ஒதுக்கீட்டுக்காக போர் முழக்கம் எழுப்பும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை நம் வன்னியர் மக்கள் நினைச்சுப் பார்க்கணும்.
கடந்த ஐந்து வருஷங்களுக்கு முன்பாக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமது மைத்துனரின் ஆதரவில் செயல்பட்டு வரும் தமது சாதி சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தவர் தான் இந்த ஸ்டாலின். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வாதங்களை வலிமையாக வைக்காமல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கும் மிகவும் முக்கிய காரணமாகவும் இருந்தார்.
அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியில் ஆணையைப் பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் ஆணையை பிறப்பித்த பிறகு இன்றுவரை 1423 நாள்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை.



