டெல்லியில் அமித்ஷா- அண்ணாமலை மோதல்..பின்னணியில் என்னதான் நடக்கிறது.?

Advertisements
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்த நிலையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் நிமித்தமாக என்னை திரும்பவும் லண்டனுக்கு அனுப்பி விடுங்கள் நான் நிம்மதியாக போய் விடுகிறேன் என்று அண்ணாமலை அமித்ஷாவிடம் ஆவேசமாக பேசியிருக்கிறார் .
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியைப் பிடிப்பதன் மூலம்  தமிழ்நாட்டை டெல்லி பாஜக தன் வசம் கொண்டு வரலாம் என டெல்லி மேலிடம் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது . அந்த வகையில்,  தற்போது வரை அதிமுகவுக்கு பலமான கூட்டணி இல்லை . அதாவது ,  திமுகவிற்கு 40 சதவீத வாக்கு வங்கி உறுதியாக இருக்கிறது . எனவே சரியான கூட்டணி அமையாவிட்டால் அதிமுக வெற்றி பெறுவது கடினம் என்கிற உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று டெல்லி மேல் இடத்திற்கு சென்றது .
இதன் அடிப்படையில் தான் பீகார் மாநில தேர்தல் முடிந்த கையோடு தமிழ்நாட்டு தேர்தல் பணிகளை  உள்துறை அமைச்சர் அமித்ஷா முடுக்கி விட்டு இருக்கிறார் . அந்த வகையில் முதல் கட்டமாக ஓ பன்னீர் செல்வத்தை அழைத்து பேசினார் . அப்பொழுது ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜகவும் கூட்டணியில் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் .
அப்பொழுது அமித்ஷா அவரிடம் உங்களை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன்.  ஒருவேளை அது முடியாவிட்டாலும் பாஜக கூட்டணியில் நீங்கள் இருப்பீர்கள் . உங்களுக்கு ஐந்து அல்லது ஆறு தொகுதிகளை ஒதுக்கி தருகிறேன் இது சம்பந்தமாக நான் சென்னை வரும்பொழுது பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பி இருக்கிறார் . இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனையும் ஒருங்கிணைப்பதற்காக அண்ணாமலைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி , கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் ஒரு தனி பங்களாவில் அண்ணாமலையும் டிடி வி தினகரனும் இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினார்கள் . அப்பொழுது டிடிவி தினகரனை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது . இந்த சமயத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமியின் பல அதிரடி முடிவுகளை முன்னதாகவே தெரிந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக அண்ணாமலையை டெல்லிக்கு வரும்படி அழைத்தார்.
இதற்கிடையே அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி இடம் பேசி இருந்தார் . அப்பொழுது நான் யோசித்து சொல்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லியிருக்கிறார்.  இதன் மூலம் அவர் தனது யோசனைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் சம்மதம் தெரிவிப்பார் என அமித்ஷா கருதினார் . அதேசமயம் தென் மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி ஃபோனில் தொடர்பு கொண்டு ஓ பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொள்ளலாமா என விசாரணை நடத்தினார்.
இதில் பெரும்பாலான பேர் ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் சிலர் பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்கள் . இதனை தொடர்ந்து ,  டிடிவி தினகரன் குறித்து அவர் கருத்து கேட்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும் வரை நான் கூட்டணியில் சேர மாட்டேன் என டிடிவி தினகரன் அடம் பிடித்து வருகிறார் . எனவே அவரை நமது கூட்டணியில் வைத்துக் கொண்டால் மீண்டும் குழப்பம் தான் ஏற்படும் அரசியலும் செய்ய முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர் .
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.  இந்த கூட்டத்தில் அதிமுக தரப்பில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உரித்தானவை என்றும் , கூட்டணி குறித்த வேறு விஷயங்கள் குறித்தோ எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவிஜெயலலிதா ஆகியோருக்கு எதிரிகள் மட்டும் தான் இருந்தார்கள் . ஆனால் நமது அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளும் இருக்கிறார்கள் துரோகிகளும் இருக்கிறார்கள் என்று பேசினார் . அதேபோல் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசும்போது அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மை அழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் எதிரி திமுக மட்டுமல்ல துரோகிகள் மட்டுமல்ல நம்மோடு உறவாடிக் கொண்டு இருப்பவர்களும் இதில் இருக்கிறார்கள் எதிரி நமக்கு யார் என்று தெரியும் . தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கருணாநிதி ஸ்டாலின் திமுக ஆகியோர்தான் நமக்கு எதிரி என்பது தெரியும். ஆனால்,  நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும் சில அரசியல் புரோக்கர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார் .
இது ஒரு வகையில் மறைமுகமாக பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் பேச்சு என கருதப்படுகிறது இது குறித்து மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி பதில் எதுவும் பேசவில்லை மறுப்பும் தெரிவிக்கவில்லை . இந்த சூழ்நிலையில்தான் அதிமுகவை  ஒருங்கிணைக்கும் படியான ஏதாவது தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி தீர்மானங்கள் எதுவும் நிறைவேறவில்லை .
இது பற்றி தகவல்களை அறிந்த உள்துறை அமைச்சர் , அமித்ஷா மிகவும் கோபமடைந்து இருக்கிறார் ஏற்கனவே ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்கும் பணியை அண்ணாமலை இடம்தான் அவர் கொடுத்திருந்தார் . தற்பொழுது அந்த பணி சரியாக நடைபெறவில்லை என்பதுடன் மறைமுகமாக பாஜகவை அதிமுக எச்சரிக்கிறது எனவும் புரிந்து கொண்ட அமித்ஷா இது குறித்து அண்ணாமலையிடம் பேசியிருக்கிறார் .
அப்பொழுது அண்ணாமலை இன்னும் சற்று பொறுத்திருங்கள் கண்டிப்பாக இவர்களை நமது கூட்டணியில் சேர்த்து விடலாம் அதிமுகவுடன் ஒருங்கிணைக்காவிட்டால் என்ன பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருங்கிணைக்கும் பணியை நான் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் .
இதற்கிடையே , சூழ்நிலையை முன்னதாகவே அறிந்து கொண்ட ஓ பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் அதிமுக பாஜக கூட்டணியில் இடமில்லை என்றால் , தமிழக வெற்றிக்கழகம் பக்கம் தாவி விடலாம் என்றும் ஒரு திட்டத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.
ஆகவேதான் இருவரிடமும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொள்வீர்ர்களா என்று நிருபர்கள் கேட்கும் போதெல்லாம் அது பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் தெரிவித்து வருகிறார்கள் . இந்த சூழ்நிலையில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை இடம் நீங்கள் பணியை சரியாக செய்யுங்கள். தற்பொழுது கொடுத்த பணியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று அமித்ஷா கோபத்துடன் பேசி இருக்கிறார்.
இதற்கு ஒரு கட்டத்தில் பதில் தெரிவித்த அண்ணாமலை தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.  முன்பு போல் என்னை லண்டனுக்கு படிக்க அனுப்பி விடுங்கள்.  நான் நிம்மதியாக அங்கு போய் படிக்கிறேன் என்று கோபமாக பேசியிருக்கிறார்  . இதன் பிறகு சமாதானம் அடைந்த அமைச்சர் சரி பரவாயில்லை எப்படியும் இந்த காரியத்தை நிறைவேற்றுங்கள்.  ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் எந்த காரணம் கொண்டும் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து விடக்கூடாது . அவர்களை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளலாம் அதற்கான வழியை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார் .
இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமியும் நான் அவர்களை அதிமுகவுடன் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை . நீங்கள் வேண்டுமானால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு ஒதுக்கி தரப்படும் தொகுதிகளை நீங்கள் பிரித்துக் கொள்ளுங்கள் அதே வேளையில் ஓ பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் உங்களுடன் கூட்டணி சேரக்கூடாது. ஏதாவது,  ஒரு புதிய அமைப்பு தொடங்கி அதன் பேரில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்று கருத்தை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது .
இதனைத் தொடர்ந்து,  பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ பன்னீர் செல்வத்திற்கு 5 தொகுதிகளும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 9 தொகுதிகளும் ஒதுக்கி தரலாமா என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.  எனவே இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை செய்து வருகிறார் . இதற்கிடையே,  டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷா வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமித்ஷா திடீரென ஓ பன்னீர் செல்வத்திற்கு போன் செய்து கான்பிரன்ஸ் காலில் பேசியிருக்கிறார் .
அப்பொழுது அண்ணாமலை உடன் இருந்திருக்கிறார் இந்த சமயத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் அமித்ஷா என்ன பேசினார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை . இத்தகைய அரசியல் சூழ்நிலையில் அடுத்த கட்டமாக அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக ஆகியவற்றை இணைத்துக் கொள்ளும் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும் என தெரிகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *