
வாசனை, சுவை அறியும் திறனை இழந்தேன் என்று மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி, உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதன் 16-வது ஆண்டு விழா கொச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக, கோச்லேயர் இன்பிளேன்ட் அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நடிகர் மும்முட்டி பேசினார். அப்போது, நீண்ட காலமாக என்னால் எந்த வாசனையையோ, எதன் சுவையையோ உணர முடியவில்லை எனவும், அந்தத் திறன்களை நாம் இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும்.
இப்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருகிறேன். அதுபோல கேட்கும் திறன் என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு மம்மூட்டியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அவரே தனது உடல்நிலை குறித்து பேசியது, அனைவரின் கவனத்திற்கும் சென்றுள்ளது.



