திமுக – தேமுதிக கூட்டணி: என்ன நடந்தது? புதிய கருத்துக்கணிப்பு.! 

Advertisements
தமிழக அரசியலில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கூட்டணி குறித்து ஒரு முடிவுக்கு வந்து தற்பொழுது திமுக தேமுதிக கூட்டணி என அறிவிக்கப்பட்டிருக்கிறது . இந்த கூட்டணி எப்படி ஏற்பட்டது இதன் பின்னணியில் நடந்த விவகாரங்கள் என்ன.?  திமுக தேமுதிக ஆகிய கூட்டணி யால் யாருக்கு என்ன லாபம் என்பது தொடர்பான புதிய கருத்துக்கணிப்புகள் ஆகியவை வெளியே தெரிய வந்துள்ளன…
தமிழ்நாட்டில் தேமுதிக கட்சிக்கு பூஜ்ஜியம் புள்ளி 45 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை தேமுதிகவிற்கு ஓட்டுகள் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது . இந்த நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் ஏராளமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கையை எந்த கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை . அதே வேலையில் அதிமுகவுடன் தேமுதிகவை இணைக்க வேண்டும் என்பதில் டெல்லி பாஜக மேலிடம் உறுதியாக இருந்தது இதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . கடைசி கட்டமாக பாஜக தரப்பினும் திமுக தரப்பிலும் உச்சகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில்,  பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.  இது தொடர்பாக அவர் முதல்வர் மு க ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து பூங்கொத்துகொடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டார் . அறிவாலயத்தில் மு க ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் நேராக கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்தார்.  விஜயகாந்த்தை பொருத்தவரையில் 5ஆம் எண் அவருக்கு ராசி ஆகும் .
அந்த வகையில் விஜயகாந்த் நினைவிடத்தில் உள்ள ஆலய மணியை ஐந்து முறை அடித்து விஜயகாந்த் முன்பாக நின்று பிரேயர் செய்த நிலையில் , பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கூட்டணி முடிவு பற்றி அறிவித்தார் .  கடந்த மூன்று மாதமாக திமுகவுக்கு எதிராக பேசி வந்தவர் பிரேமலதா விஜயகாந்த் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சரியாக செயல்படவில்லை . திமுக அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள் . என்றெல்லாம் பேசி வந்த அவர் தற்பொழுது திமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனிடையே , அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியபோது பாஜக தரப்பில் இறுதி முடிவாக ஏழு தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் தரப்படுவதாக சொல்லப்பட்டது.  ஆனால் விஜயகாந்த் பிரேமலதா விஜயகாந்த் இதனை ஏற்று கொள்ளவில்லை . மேலும் , ஏற்கனவே கடந்த தேர்தலில் ராஜ்யசபா பதவி தருவதாக சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டார்கள் என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது ,
இதற்கிடையே , அவர் தேமுதிக நிர்வாகிகளை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் . அதில் வாக்கு பெட்டி ஒன்றை வைத்து திமுகவுடன் கூட்டணி சேரலாமா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ஓட்டு கேட்டார்.இதில் 90% நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என தனது வாக்குகளை அந்த பெட்டியில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து , அமைச்சர்கள் ஏவா வேலு , தங்கம் தென்னரசு மற்றும் சபரீசன் ஆகியோர் பிரேமலதா விஜயகாந்த் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . தங்களுக்கு பதினாறு தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் தரவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சு வார்த்தையை தொடங்கினார் . ஆனால் இதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  இதன் பின்னர் 14 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் 12 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்றெல்லாம் கீழே இறங்கி வந்து கடைசியாக 10 தொகுதிகளை ஒதுக்கி தருவதாகவும் ஒரு ராஜ்யசபா பதவி தருவதாகவும் பேச்சுவார்த்தை முடிவடைந்தது .
இந்த நிலையில் தான் தற்போது,  திமுக திமுக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்து 11 ஆண்டுகள் ஆகின்றன . தற்பொழுது 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தேமுதிக ஆகியவை கூட்டணி சேர்ந்து இருக்கின்றன . இடைப்பட்ட காலங்களில் மு க ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பலமுறை ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டார் . ஆனால் விஜயகாந்த் அப்போதெல்லாம் மறுத்திருக்கிறார் .
இப்பொழுது தேமுதிக கூட்டணிக்கு பிரேமலதா விஜயகாந்த் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது . இதனிடையே தேமுதிக கூட்டணியில் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தொடர்பாக சபரீசன் நடத்தி வரும் பென் நிறுவனம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.  தமிழகத்தை பொறுத்தவரையில் சுமார் 37 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்புகளை தேமுதிக பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
அந்த வகையில் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை தர்மபுரி விருதுநகர் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிகவிற்கு செல்வாக்கு இருக்கிறது . தேமுதிகவை கூட்டணியாக சேர்த்துக் கொண்டால் அது திமுகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இருவரும் கூட்டணி சேர்த்து போட்டியிடும் சூழ்நிலையில் சுமார் 30 தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது .
சபரீசன் நடத்தி வரும் பென்அமைப்பு தெரிவித்த இந்த தகவல் அடிப்படையில்தான் திமுக தற்பொழுது கூட்டணி அமைத்திருக்கிறது . தேமுதிகவிற்கு 10 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் தருவதாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.  இதில் , விருதுநகர் தொகுதி விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றால் அவர் சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு செல்வார் .
ஒருவேளை தோல்வியை தழுவினால் அவருக்கு ராஜ்யசபா பதவி தரப்பட்டு டெல்லிக்கு செல்வார் என்பது பின்னணி செய்தியாகும் . இதற்கிடையே திமுக தேமுதிக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது கூட்டணி குறித்து முடிவு எடுப்பது ஒவ்வொரு கட்சியின் தலைவர் விருப்பத்தை பொறுத்தது என்ற பதில் அளித்து இருக்கிறார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கருத்து தெரிவிக்கும் பொழுது இந்த கூட்டணி குறித்து கேப்டன் விஜயகாந்த் ஆவி பிரேமலதா விஜயகாந்த்தை மன்னிக்காது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே , இன்னும் ஒரு சில தினங்களில் தேமுதிக தரப்பில் வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவடைகிறது . எனவே தமிழ்நாடு முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் தற்பொழுது உற்சாக நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிக தரப்பில் பத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்பது தற்போதைய செய்தி ஆகும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *