ஸ்டாலினின் பிரச்சார வாகனத்தை சோதனை செய்த அதிகாரிகள்.!

Advertisements

தஞ்சாவூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரச்சார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்தி நிறுத்தி அதிரடியாகச்க சோதனை செய்துள்ளனர்.

திருவாரூரில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதில், திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

இதையடுத்து, தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். இதன் பின்னர், அங்கிருந்து பிரச்சார வாகனம் மூலம் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தஞ்சாவூர் அருகே சாலியமங்கலத்தில் அவர் சென்ற பிரச்சார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்தி நிறுத்தினர். அப்போது, முதலமைச்சர் அமர்ந்திருந்த வாகனத்தின் முன்பகுதி கதவை திறந்து பெண் காவலர் சோதனை செய்தார். இதனை யடுத்து, வேனின் பின்பகுதி கதவையும் திறந்து சோதனை செய்தனர்.

தொடர்ந்து, வாகனத்தில் எதுவும் இல்லாததால் முதலமைச்சரின் வாகனத்தை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *