
பாகிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்..
ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினருக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத் தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க பாகிஸ்தான் ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.


