மக்களுக்குக் கடனை வைத்து விட்டு செல்பவன் நல்ல தலைவனா.? – சீமான்.!

Advertisements
சொந்த நாட்டு மக்களுக்குக் கடனை வைத்து விட்டு செல்பவன் நல்ல தலைவனா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசிய போது தம்பி விஜய் பாதுகாப்பு குறைபாடு என சொல்லி இருக்கிறார்.
ஆனால், தான் காவல்துறையிடம் பாதுகாப்பே கேட்பதில்லை என்றும் தான் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
அதனால் தனக்கு அந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து, தான் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன், 2 ஆயிரத்து 500 கொடுக்கிறேன் என்கிறார்கள். மேலும் ஒருவர் மூன்று சிலிண்டர் கொடுக்கிறேன்.
ஒருவர் ஆறு சிலிண்டர் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், எங்கிருந்து கொடுப்பீர்கள்  ஏன் தன் மக்களை இப்படி ஏமாற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, சொந்த நாட்டு மக்களுக்குக் கடனை வைத்து விட்டு செல்பவன் நல்ல தலைவனா என்று வினவினார்.
திமுக வரவன் போறவனை எல்லாம் பாஜகவின் B டீம் என்று சொல்கிறது. ஆனால், பாஜகவின் A டீம் திமுக தான் என்று விமர்சித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *