தேசிய புற்று நோய் விழிப்புணர்வு தினம்…
கேன்சர்!.. என்றால் நண்டு என்று பொருள். நண்டு பூமியின் உள்ளே வலை தோண்டி நீண்டு கொண்டே செல்லும். அதுபோல புற்றுநோய் எனப்படும் கேன்சர் மனித உடலில் எங்கு வேண்டுமானாலும் புள்ளியாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தின்று பிறகு உயிரே போகும் நிலை உருவாகும்.
புற்று நோய் தொடர்பான அறிகுறிகளில் சில- உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், தொடர்ந்த அஜீரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான இரத்தப்போக்கு மற்றும் ரத்த கசிவு, நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோகிராம், சிடி ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன. புற்று நோய் ஒரு உறுப்பை பாதித்துவிட்டால், அந்த உறுப்பை அகற்றாமல், நோயைக் குணப்படுத்துவதே நவீன மருத்துவத்தின் இலக்காகும்.
இந்நோய் எப்படி வருகிறது? காரணம் என்ன? காரணிகள் யாவை? புகையிலை, சிகரெட் இவற்றால் வருவதாக பரவலாக கூறப்பட்டது. ஆனால் எந்த பழக்கமும் இல்லாதவர்களுக்குக் கூட இந் நோய் தாக்குகிறது.உடலின் அனைத்து உறுப்புகளையும் சில காரணங்களால் தாக்குகிறது. பரம்பரை நோய் என்று கேட்டால் அதுவும் இல்லை. புரியாத புதிராகவே இருந்து வருகிறது. நாம் உண்ணும் உணவேகூட காரணமாக அமைகிறது.
இவற்றில் பல வகை உண்டு. தன்மைகள் வேறுபடும். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மீள்வது உறுதி. நுரையீரல், மார்பு,வாய்,கல்லீரல் ரத்த, ஆசனவாய்,தோல்,எலும்பு, போன்ற வகைகள் உண்டு. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணமாக்கிவிடலாம். முற்றிய நிலையில் குணமாக்குவது கடினம். அதற்காக பயப்படத் தேவையில்லை. மருத்துவர்கள் பரிந்துரையின் படி சிகிச்சை மேற் கொண்டால் போதுமானது.
இப்போது பரவலாக பெண்களுக்கு மார்பக புற்று நோய் காணப்படுகிறது. அடுத்ததாக கர்ப்பப்பை புற்று நோய் தாக்குகிறது. இது முழுக்க முழுக்க தொற்று நோய் இல்லை. தீவிரத்துக்கு ஏற்றார் போல அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை, இலக்கு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற பலவகையான சிகிச்சை முறைகள் இந்தியாவிலே உள்ளன.
புற்றுநோய் வந்து அதை மன உறுதியோடு அதை எதிர்த்து போராடி வெற்றி கொண்டவர்கள் பலர் நம்மிடையே உள்ளனர் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் எதிர்பார்ப்பாகும். இத்தினத்தை உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு (Union for International Cancer Control, UIIC) முன்னின்று நடத்துகிறது. இந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், உலக சுகாதார நிறுவனம் இணைந்து பல முன்னேற்பாடுகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.