Koyambedu market: தக்காளி விலை கிடு கிடு உயர்வு…இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Advertisements

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை:சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.80 வரையும், கோயம்பேட்டிற்கு வெளியே ரூ.90 வரையும் தக்காளி விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளை கிலோ ரூ.38, கேரட் கிலோ ரூ.40, தேங்காய் கிலோ ரூ.52, இஞ்சி கிலோ ரூ.150, மாங்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு காரணமாகத் தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *