Advertisements
குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே… பாடல் பாடி அறிமுகமானவர் கமலஹாசன்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதுவரை ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சமாக அறிமுகமாகிய கமல்ஹாசன், 1960ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் முதன் முதலாக நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் 6 வயதிலேயே நடித்த கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். கொஞ்சம் வளர்ந்த இளைஞனானதும் 1970ம் ஆண்டு வெளியான ‘மாணவன்’ என்ற படத்தில் ஒரே ஒரு பாடலில் திரையில் தோன்றினார். 1973ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் துணை தோற்றத்தில் தோன்றினார். தொடர்ந்து சொல்லத்தான் நினைக்கிறேன், குமஸ்தாவின் மகள் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார்.
1974ம் ஆண்டு வெளிவந்த ‘ நான் அவன் இல்லை’ படமே கமல் கடைசியாக நடித்த படமாக இருந்தது. தமிழில் துணை நடிகராக நடித்து வந்தாலும், 1974ம் ஆண்டு வெளிவந்த கன்னியாகுமரி என்ற மலையாள படம் மூலம் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து கே. பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஹீரோவாக கமல்ஹாசன் அறிமுகமானார். முதல் படமே ‘ஃபிலிம்பேர் விருது’, தேசிய விருது கிடைத்தது.
1970களில் சினிமாவில் ரஜினி நடிக்க வந்த காலக்கட்டம் அப்பொழுது, கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தார். ரஜினி, கமல் இணைந்து 8 படங்களில் நடித்துள்ளனர். அதில் கமல்ஹாசன் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும் நடித்துள்ளனர். 16 வயதினிலே, மூன்று முச்சு, அவர்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகின.
இவை இல்லாமல் சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, நீயா, நினைத்தாலே இனிக்கும், ராஜப்பார்வை, மூன்றாம் பிறை போன்ற படங்கள் கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று வருகிறது. தமிழ் படத்தில் நடித்து வந்த அதே நேரத்தில் ’ஏக் துஜே கே லியே’, ராஜ் திலக், கிரஃப்தார் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து அசத்தினார். அதன் தொடர்ச்சியாக 1990களில் வெளிவந்த அபூர்வ சகோதர்கள், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், அவ்வை ஷண்முகி உள்ளிட்ட படங்கள் கமலின் எவர்கிரீன் படங்களாக உள்ளன. இதில் கமலின் நடிப்பு திறமையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அதன்பிறகு நடிப்புக்கு இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்ட கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்து நடித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, தெனாலிராமன், பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா MBBS போன்ற நகைச்சுவை படங்களில் நடித்து அசத்தினார். அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு, தசாவதராம, விஸ்வரூபம் படங்களில் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது.
அண்மையில் வெளிவந்த விக்ரம் 2 படம் வசூலிலும், விமர்சனத்திலும் வசூலை வாரி குவித்தது. தற்போது இந்தியன்2, கமல்ஹாசன் 234, மீண்டும் மணி ரத்னத்துடன் இணைந்து தக் லைப்(Thug Iife) போன்ற படங்களில் நடித்து வருகிறார். நேற்று மணி ரத்னம் இயக்கும் கமலின் தக் லைஃப் படத்தில் டைட்டில் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
திரையுலகின் நாயகனாக இருந்து உலக நாயகனாக உயர்ந்த கமல்ஹாசனிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.